Posted on

மூலாதார வித்தக விநாயகரின்  தத்துவ நிலைகளைப் போதிக்கும் யோக சூத்திரங்கள் மூலமாகவும் விஞ்ஞான பூர்வகமாகவும் விளக்க உரைகளுடன் கூடிய ஏனைய பாரம்பரியப் புராணக் கதைகளை  விளங்கப்படுத்தும் இணையமாக அளவையம்பதி சிறப்புப் பக்கமாக மாற்றப்பட்டுள்ளது!

அண்டம் என்ற பிரபஞ்சத்தில் உள்ள பஞ்ச பூதங் களின் (ஆதியும் அந்தமும் இல்லாத இறைவனின்(சிவன்) ஒரு பகுதிதான் பிண்டமாகிய நமது உடலிலும் இயங்குகின்றது.

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் , என்ற ஐந்து  பூதங்களில் நிலம் கீழே நாம் வாழ்வதற்கு ஆதாரமாகவும், ஆகாயம் மேலே சாட்சியாகவும் இருப்பதால் நடுவில் உள்ள நீர், நெருப்பு, காற்று என்ற மூன்று விதசக்திகளாக உடலிலும் இயங்குகின்றது.

குமரக்கோட்டம் ஆரம்பம்    12-09-12

 

இராவத்தை வயிரவாலய விநாயகர்

1) கணபதி என்றிட கலங்கும் வல்வினை 

கணபதி என்றிட காலனும் கை தொழும்

கணபதி என்றிட கருமம் ஆதலால் 

கணபதி என்றிட கவலை தீருமே

2)விநாயகர் துதி :-திருஞானசம்பந்தர் அருளியது

வாக்குண்டாம் நல்ல் மனமுண்டாம்

மாமலரால் நோக்குண்டாம் மேனி நுடங்காது

பூக்கொண்டு துப்பார் திருமேனி

தும்பிக்கையான் பாதம் தப்பாமல் தமக்கு

3)திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்

பெருவாக்கும் பீடும்பெருக்கும் உருவாக்கும்

ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்

காதலால் கூப்புவர்தம் கை.

4)பிடியத னுருவுமை கொளமிகு கரியது

வடிகொடு தனதடி வழிபடு மவரிடர்

கடிகண பதிவர வருளினன் மிகுகொடை

வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே

5)ஜந்து கரத்தனை யானை முகத்தனை

இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை

நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை

புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே

6)மங்களத்து நாயகனே மண்ணாளும் முதலிறைவா! 

பொங்குதன வயிற்றோனே பொற்புடைய ரத்தினனே
சங்கரனார் தருமதலாய் சங்கடத்தைச் சம்கரிக்கும்
எங்கள்குல விடிவிளக்கே எழில்மணியே கணபதியே! 

7)வினாயகர் பெருமை

http://sivasiva.dk/sotpolivukal/vinayagar1.mp3

8)ஒளவையார் அருளியது

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை

நாலும் கலந்துனக்கு நான்தருவேன் கோலஞ்செய்

துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்

சங்கத் தமிழ்மூன்றுந் தா

9) நல்வழி : ஒளவையார் அருளியது

நெஞ்சக் கனகல்லூ நெகிழ்ந்துருக

தஞ்சத் தருள் சண்முகனுக் கியல்சேர்

செஞ்சொற் புனைமாலை சிறந்திடவே

பஞ்சக்கர ஆனை பதம் பணிவாம்

10) காப்பு

அடலருணைத் திருக் கோபுரத் தேயந்த வாயிலுக்கு

வட வருகிற் சென்று கண்டுகொண்டேன்வருவார் தலையில்

தடபடெனப்படு குட்டுடன் சர்க்கரை மொக்கியகைக்

கடதட கும்பக களிற்றுக் கிளைய களிற்றினையே

11)காப்பு

வாரணத் தானை யயனைவிண் ணோரை மலர்க்கரத்து
வாரணத் தானை மகத்துவென் றோன்மைந் தனைத்துவச
வாரணத் தானைத் துணைநயந் தானை வயலருணை
வாரணத் தானைத் திறைகொண்ட யானையை வாழ்த்துவனே.

12) தார் அமர் கொன்றையும் சண்பக மாலையும் சாத்தும் தில்லை

ஊரர்தம் பாகத்து உமை மைந்தனே.-உலகு ஏழும் பெற்ற

சீர் அபிராமி அந்தாதி எப்போதும் எந்தன் சிந்தையுள்ளே

கார் அமர் மேனிக் கணபதியே.-நிற்கக் கட்டுரையே

13)நெஞ்சக் கனகல்லூ நெகிழ்ந்துருக

தஞ்சத் தருள் சண்முகனுக் கியல்சேர் 

செஞ்சொற் புனைமாலை சிறந்திடவே 

பஞ்சக்கர ஆனை பதம் பணிவாம் 

அருணகிரிநாதர் – கந்தர் அநுபூதி

14) வானுலகும் மண்ணுலகும் வாழமறை வாழப்

பான்மைதரு செய்யதமிழ்ப் பார்மிசை விளங்க 
ஞானமத ஐந்கர மூன்றுவிழி நால்வாய்
யானைமுக னைப்பரவி அஞ்சலிசெய் கிற்பாம் 

15) தந்தன தனதன தந்தன தனதன

தந்தன தனதன …… தனதான

கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி
கப்பிய கரிமுக …… னடிபேணிக்

கற்றிடு மடியவர் புத்தியி லுறைபவ
கற்பக மெனவினை …… கடிதேகும்

மத்தமு மதியமும் வைத்திடு மரன்மகன்
மற்பொரு திரள்புய …… மதயானை

மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
மட்டவிழ் மலர்கொடு …… பணிவேனே (தி 1)

முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில்
முற்பட எழுதிய …… முதல்வோனே

முப்புர மெரிசெய்த அச்சிவ னுறைரதம்
அச்சது பொடிசெய்த …… அதிதீரா

அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்
அப்புன மதனிடை …… இபமாகி

அக்குற மகளுட னச்சிறு முருகனை
அக்கண மணமருள் …… பெருமாளே.
கரதலத்தில் நிறைந்துள்ள பழம், அப்பம், அவல், பொரி (இவைகளை) வாரி உண்ணும் யானை முகக் கடவுளின் திருவடிகளை விரும்பி, அறிவு நூல்களைக் கற்கும் அடியவர்களுடைய மனதில் நீங்காது வாழ்பவனே, நினைத்தவற்றை அளிக்கும் கற்பக விருட்சமே, என்று உன்னைத் துதி செய்தால் வினைகள் யாவும் விரைவில் ஓடிப் போய்விடும். ஊமத்த மலரும், (பிறைச்) சந்திரனும் சடையில் தரித்த சிவபெருமானுடைய மகனும், மற்போருக்குத் தக்க திரண்ட தோள்களையுடையவனும், மத யானையை ஒத்தவனும், மத்தளம் போன்ற பெருவயிறு உடையவனும், உத்தமியாகிய பார்வதியின் மகனும் ஆகிய கணபதியைத் தேன் துளிர்க்கும் புது மலர்களைக் கொண்டு நான் வணங்குவேன். இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழ் நூல் முறைமையை, மலைகளுள் முற்பட்டதான மேரு மலையில் முதல் முதலில் எழுதிய முதன்மையானவனே, (அசுரர்களின்) திரி புரங்களையும் எரித்த அந்தச் சிவ பெருமான் எழுந்தருளிய ரதத்தின் சக்கர அச்சை ஒடித்துத் தூளாக்கிய மிகுந்த தீரனே*, (வள்ளி மீது கொண்ட காதலாகிய) அந்தத் துயரத்தோடு (உன் தம்பியாகிய) சுப்பிரமணியன் நடந்த அந்தத் தினைப் புனத்திடையில் யானையாகத் தோன்றி, அந்தக் குற மகளாகிய வள்ளியுடன் அந்தச் சிறிய முருக வேளை அத்தருணத்திலேயே மணம் புரியுமாறு திருவருள் பாலித்த பெருமாளே.

* திரிபுரத்தின்மேல் படையெடுக்கத் தொடங்குகையில் சிவபெருமான் விநாயகரைப் பூஜிக்க மறந்தார். ஆதலால் சிவபெருமான் ஏறி வந்த தேரின் அச்சு முறியும்படி விநாயகர் செய்தார் என்பது சிவபுராணம்

 

16)தத்ததன தத்ததன தத்ததன தத்ததன

தத்ததன தத்ததன …… தனதான

பக்கரைவி சித்ரமணி பொற்கலணை யிட்டநடை
பட்சியெனு முக்ரதுர …… கமுநீபப்

பக்குவம லர்த்தொடையும் அக்குவடு பட்டொழிய
பட்டுருவ விட்டருள்கை …… வடிவேலும்

திக்கதும திக்கவரு குக்குடமும் ரட்சைதரு
சிற்றடியு முற்றியப …… னிருதோளும்

செய்ப்பதியும் வைத்துயர்தி ருப்புகழ்வி ருப்பமொடு
செப்பெனஎ னக்கருள்கை …… மறவேனே

இக்கவரை நற்கனிகள் சர்க்கரைப ருப்புடனெய்
எட்பொரிய வற்றுவரை …… இளநீர்வண்

டெச்சில்பய றப்பவகை பச்சரிசி பிட்டுவெள
ரிப்பழமி டிப்பல்வகை …… தனிமூலம்

மிக்கஅடி சிற்கடலை பட்சணமெ னக்கொளொரு
விக்கிநச மர்த்தனெனும் …… அருளாழி

வெற்பகுடி லச்சடில விற்பரம ரப்பரருள்
வித்தகம ருப்புடைய …… பெருமாளே.
அங்கவடி, பேரழகான மணி, பொன் நிறமான சேணம் இவைகளைப் பூண்டு கம்பீரமாக நடக்கும் பறவையாகிய, மிடுக்குள்ள (மயிலாகிய) குதிரையையும், கடம்ப மரத்தின் நன்கு பூத்த மலர்களால் தொடுக்கப்பட்ட மலர் மாலையையும், அந்தக் கிரெளஞ்ச மலை அழிந்து ஒழியும்படி அதன் மேல் பட்டு ஊடுருவிச் செல்லுமாறு விட்டருளிய திருக்கையில் உள்ள கூர்மையான வேலையும், திக்குகள் எட்டும் மதிக்கும்படி எழுந்துள்ள கொடியிலுள்ள சேவலையும், காத்தளிக்கும் சிறிய திருவடிகளையும், திரண்ட பன்னிரண்டு தோள்களையும், வயலூரையும் பாட்டிலே வைத்து உயர்ந்த திருப்புகழை விருப்பமோடு சொல்லுக* என்று எனக்கு அருள் செய்ததை மறக்க மாட்டேன். கரும்பு, அவரை, நல்ல பழங்கள், சர்க்கரை, பருப்பு, நெய், எள், பொரி, அவல், துவரை, இள நீர், தேன், பயறு, அப்ப வகைகள், பச்சரிசி, பிட்டு, வெள்ளரிப்பழம், பல வகையான மாவு வகைகள், ஒப்பற்ற கிழங்குகள், சிறந்த உணவு (வகைகள்), கடலை (இவைகளை) பட்சணமாகக் கொள்ளும் ஒப்பற்ற, வினைகளை நீக்க வல்லவர் என்று சொல்லப்படும் அருட் கடலே, கருணை மலையே, வளைந்த சடையையும், பினாகம் என்னும் வில்லையும் கொண்ட மேலான அப்பர் சிவபிரான் பெற்றருளிய திறலோனே, ஒற்றைக் கொம்பு** உடைய பெருமாளே.

* திருவண்ணாமலையில் ‘முத்தைத்தரு’ என்ற முதல் பாட்டைப் பாடிய பின்னர் அருணகிரிநாதரை வயலூர் என்ற ‘செய்ப்பதி’க்கு முருகன் வரப்பணித்தார். அங்கு தமது மயிலையும், கடப்ப மாலையையும், வேலையும், சேவலையும், பன்னிரு தோள்களையும், திருவடிகளையும், வயலூரையும் வைத்துப் பாடல் பாடக் கூறினார். அந்த அபூர்வமான பாடல்தான் இது.

** மேருமலையில் முன்னர் ‘வியாசர்’ விநாயகரிடம் தாம் பாரதத்தைச் சொல்லச் சொல்ல வேகமாக ஏட்டில் எழுதப் பணித்தார். எழுதுகோலாக தனது கொம்புகளின் ஒன்றை ஒடித்து விநாயகர் எழுதத் தொடங்கினார். எனவே அவருக்கு ‘ஏகதந்தன்’ (ஒற்றைக் கொம்பர்) என்ற பெயர் வந்தது.

 

17) காப்பு

கரும்பு மி்ளநீருங் காரெள்ளுந் தேனும்
விரும்பு மவல்பலவும் மேன்மே – லருந்திக்
குணமுடைய னாய்வந்து குற்றங்க டீர்க்குங்.
கணபதியே யிக்கதைக்குக் காப்பு.
திருவிளங்கு மான்மருகா சேவதனி லேறி
வருமரன்றா னீன்றருளு மைந்தா – முருகனுக்கு
முன்பிறந்த யானை முகவா வுனைத் தொழுவேன்
என்கதைக்கு நீயென்றுங் காப்பு.விநாயகர் துதி
திருவாக்குஞ் செய்கருமங் கைகூட்டுஞ் செஞ்சொற்
பெருவாக்கும் பீடும் பெருக்கும் – உருவாக்கும்
ஆதலால் வானோரு மானை முகத்தோனைக்
காதலாற் கூப்புவர்தங் கை.ஒற்றை யணிமருப்பு மோரிரண்டு கைத்தலமும்
வெற்றி புனைந்த விழிமூன்றும் – பெற்றதொரு
தண்டைக்கால் வாரணத்தைத் தன்மனத்தி லெப்பொமுதுங்
கொண்டக்கால் வராது கூற்று.சப்பாணி
எள்ளு பொரிதேன் அவல்அப்பமிக்கும் பயறும் இளநீரும்
வள்ளிக் கிழங்கும் மாம்பழமும் வாழைப்பழமும் பலாப்பழமும்
வெள்ளைப்பாலும் மோதகமும் விரும்பிப்படைத்தேன் சந்நிதியில்
கொள்ளைக் கருணைக் கணபதியேகொட்டி அருள்க சப்பாணி.சண்டப் பெருச்சாளி ஏறிச் சடைகொண்டு வையத் துலாவி
அண்டத்து அமரர் துதிக்க அடியார்க்கு அருளும் பிரானே
எண்திக்கும் அன்பர்கள் பார்க்க இணையற்ற பேரொளி வீசக்
குண்டைக் கணபதி நம்பி கொடுங்கையாற் சப்பாணி கொட்டே

 

18)அல்லல் போம் வல்வினை போம் அன்னை வயிற்றில் பிறந்த

தொல்லை போம் போகாத் துயரம் போம்

நல்ல் குணம் அதிகம் ஆம் அருணைக் கோபுர்த்துள்

வீற்றிருக்கும் செல்வக்  கணபதியைக் கைத்தொழுத்க்கால்.

 

19)காசிப முனிவர் அருளிய  விநாயகர் கவசம் தாந்திரீக பிரயோகமுறை –

http://yogicpsychology-research.blogspot.co.uk/2012/06/01.html

20)மூச்சுக் கலைகாலால் எழுப்பும் கருத்தறி வித்தே

21)விநாயக வழிபாடு-தாந்திரீக பிரயோகமுறை

http://yogicpsychology-research.blogspot.co.uk/2012/06/01.html

http://sivasiva.dk/pillayar/agaval.mp3

http://sivasiva.dk/pillayar/asdakam.mp3

26)http://sivasiva.dk/pillayar/agaval.mp3 

27)http://www.youtube.com/watch?v=biUUwelIaxE

28)http://pillaiyar.blogspot.co.uk/2011/04/blog-post.html

http://sivasiva.dk/pillayar/kathai.mp3

30)http://www.srivinayagar.com/2011/07/blog-post_3844.html

31)மூத்த பிள்ளையார் வழிபாடு

32)விநாயகர் 108 போற்றி

ஓம் சக்திவிநாயகா போற்றி
ஓம் சிவனார் தவப்புதல்வா போற்றி
ஓம் முழுமுதற் பொருளே போற்றி
ஓம் மூலாதார மூர்த்தியே போற்றி
ஓம் உமையவள் மதலாய் போற்றி
ஓம் உத்தமர் உள்ளத்தாய் போற்றி
ஓம் மாங்கனி பெற்றாய் போற்றி
ஓம் அவ்வைக்கருளினாய் போற்றி
ஓம் கந்தனுக்கு மூத்தோய் போற்றி
ஓம் சித்தி புத்தி நாதனே போற்றி
ஓம் பாரதம் எழுதினாய் போற்றி
ஓம் மோதகம் ஏற்பாய் போற்றி
ஓம் காவிரி தந்த கருணை போற்றி
ஓம் கஜமுகனை வென்றாய் போற்றி
ஓம் அருகம்புல் ஏற்பாய் போற்றி
ஓம் அச்சினை முறித்தாய் போற்றி
ஓம் ஐங்கரத்து ஆண்டவா போற்றி
ஓம் அல்லல் அறுப்பாய் போற்றி
ஓம் பிரணவ சொரூபமே போற்றி
ஓம் வேதாந்த வித்தகனே போற்றி
ஓம் வாதாபி கணபதியே போற்றி
ஓம் சதுர்த்தி நாயகனே போற்றி
ஓம் சங்கடம் தீர்ப்பவனே போற்றி
ஓம் இளம்பிறை சூடினோய் போற்றி
ஓம் தம்பிக்கு உதவினாய் போற்றி
ஓம் கற்றோர்க்கு இனியாய் போற்றி
ஓம் கல்லார்க்கும் எளியாய் போற்றி
ஓம் உற்ற துணை நீயே போற்றி
ஓம் குற்றம் பொறுப்பாய் போற்றி
ஓம் விண்ணோர் தலைவா போற்றி
ஓம் இருவினை தீர்ப்பாய் போற்றி
ஓம் அம்மையின் பிள்ளாய் போற்றி
ஓம் ஆதிமூல விநாயகா போற்றி
ஓம் துண்டி விநாயகா போற்றி
ஓம் கருணை செய்வாய் போற்றி
ஓம் வழித்துணை வருவாய் போற்றி
ஓம் வேதவிழுப்பொருளே போற்றி
ஓம் வேண்டும் வரமருளாய் போற்றி
ஓம் மூஞ்சூறு வாகனனே போற்றி
ஓம் பிள்ளைக் கடவுளே போற்றி
ஓம் ஆனைமுகத்தானே போற்றி
ஓம் ஒற்றைக்கொம்பனே போற்றி
ஓம் வேழமுகத்தானே போற்றி
ஓம் வரமருள் வள்ளலே போற்றி
ஓம் காலத்தை வென்றாய் போற்றி
ஓம் சிந்தாமணி விநாயகா போற்றி
ஓம் வியாசருக்கு உதவினாய் போற்றி
ஓம் கயிலை சேர்ப்பிப்பாய் போற்றி
ஓம் திருமுறை காட்டியவனே போற்றி
ஓம் முத்தமிழ் வித்தக சாமியே போற்றி
ஓம் பெற்றோர் வலம் வந்தாய் போற்றி
ஓம் எருக்க மலர் ஏற்றாய் போற்றி
ஒம் ஊழ்வினை ஒழிப்பாய் போற்றி
ஓம் பொல்லாப் பிள்ளையே போற்றி
ஓம் மாற்றுரைத்த விநாயகா போற்றி
ஓம் வல்லபையை மணந்தாய் போற்றி
ஓம் பெருவயிறு கொண்டாய் போற்றி
ஓம் காட்சிக்கு சாட்சியானாய் போற்றி
ஓம் பக்தர்க்கு அருளும் பரமனே போற்றி
ஓம் தாயினும் பரிந்தருள்வாய் போற்றி
ஓம் வன்னியிலை ஏற்பாய் போற்றி
ஓம் காலம் கடந்த கற்பகமே போற்றி
ஓம் வெவ்வினை அறுப்பாய் போற்றி
ஓம் வேட்கை தணிவிப்பாய் போற்றி
ஓம் கண்ணுதற் கடவுளே போற்றி
ஓம் முருகனின் அண்ணனே போற்றி
ஓம் முக்திக்கு வித்தானாய் போற்றி
ஓம் முக்குணம் கடந்தாய் போற்றி
ஒம் வெயிலுகந்த விநாயகா போற்றி
ஓம் கோடிசூரிய ஒளியினாய் போற்றி
ஓம் வக்ரதுண்ட விநாயகா போற்றி
ஓம் நம்பினோர் வாழ்வே போற்றி
ஓம் ஏழைக்கு இரங்கினாய் போற்றி
ஓம் விடலை விரும்பினாய் போற்றி
ஓம் எருக்குவேர் ஏற்றாய் போற்றி
ஓம் அனலாசுரனை அழித்தாய் போற்றி
ஓம் புத்தியருளும் புண்ணியா போற்றி
ஓம் ஆபத்தில் காப்பாய் போற்றி
ஓம் பாவமறுப்பாய் போற்றி
ஓம் விகடச் சக்கர விநாயகா போற்றி
ஓம் விண்ணவர் தொழும் விமலா போற்றி
ஓம் மண்ணுயிர்க்கொரு மருந்தே போற்றி
ஓம் கள்ளவாரணப் பிள்ளையே போற்றி
ஓம் திருமுறை காட்டிய திருவே போற்றி
ஓம் பேழைவயிற்று பெருமானே போற்றி
ஓம் இருவேறு உருவ இறைவா போற்றி
ஓம் தம்பிக்கு வள்ளியைத் தந்தாய் போற்றி
ஓம் வேண்டும் வரமருள்வாய் போற்றி
ஓம் கரிமுகத்து எந்தாய் காப்பாய் போற்றி
ஓம் கற்றவர் விழுங்கும் கனியே போற்றி
ஓம் ஐந்தொழில் ஆற்றும் அப்பா போற்றி
ஓம் பாலும் தேனும் புசிப்பாய் போற்றி
ஓம் குணம் கடந்த குன்றமே போற்றி
ஓம் எண்ணும் எழுத்தும் ஆனாய் போற்றி
ஓம் பிறவிப்பணியை தீர்ப்பாய் போற்றி
ஓம் தோணியாய் வந்த துணைவா போற்றி
ஓம் மாலுக்கு அருளிய மதகரி போற்றி
ஓம் கரும்பாயிரம் கொள் கள்வா போற்றி
ஓம் அப்பமும் அவலும் புசித்தாய் போற்றி
ஓம் முப்புரி நூலணி மார்பினாய் போற்றி
ஓம் கருதிய செயலை முடிப்பாய் போற்றி
ஓம் செம்பொன் மேனி பெம்மான் போற்றி
ஓம் தடைகளை போக்கும் தயாபரா போற்றி
ஓம் சிறுகண் களிற்றுத் திருமுகா போற்றி
ஓம் அறுமுகச் செவ்வேள் அண்ணா போற்றி
ஓம் உள்ளத்து இருளை ஒழிப்பாய் போற்றி
ஓம் ஆக்கமும் ஊக்கமும் தருவாய் போற்றி
ஓம் வையம் வாழ்விக்க வந்தருள் போற்றி! போற்றி!!

நன்றி:http://arivomaanmeegam.blogspot.co.uk/2011/08/108.html

33)விநாயகர்  அகவல் : ஒளவையார் அருளியது

சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பலவிசை பாடப்
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் (05)
வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் (10)
இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்
சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் நின்ற கற்பகக் களிறே!
முப்பழ நுகரும் மூஷிக வாகன! (15)
இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித்
தாயா யெனக்குத் தானெழுந் தருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்
திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து (20)
குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறமிது பொருளென
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில் (25)
தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்
கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்(து)
இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து (30)
தலமொரு நான்கும் தந்தெனக் கருளி
மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே
ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
ஆறா தாரத்(து) அங்குச நிலையும் (35)
பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே
இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்
கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி
மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக் (40)
குண்டலி யதனிற் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்தறி வித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் (45)
குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச்
சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்
எண் முகமாக இனிதெனக் கருளிப் (50)
புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்
கருத்தினில் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி யினிதெனக் கருளி
என்னை யறிவித்(து) எனக்கருள் செய்து (55)
முன்னை வினையின் முதலைக் களைந்து
வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்(து)
இருள்வெளி யிரண்டுக்(கு) ஒன்றிடம் என்ன
அருள்தரும் ஆனந்தத்(து) அழுத்தியென் செவியில் (60)
எல்லை யில்லா ஆனந் தம்அளித்(து)
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி
அணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க் (65)
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத் (70)
தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட
வித்தக விநாயக விரைகழல் சரணே! (72)

ஆதாரம்:  http://ta.wikisource.org/wiki/

34)விநாயகர் அகவல்  மூலமும் குகஶ்ரீறி ரசபதி உரையும்: pm0231(2)

35)விநாயகப் பெருமான் போற்றி

ஓம் அனுகை விநாயக போற்றி
ஓம் அர்க்க விநாயக போற்றி
ஓம் அபிசாண்டி விநாயக போற்றி
ஓம் அபர விநாயக போற்றி
ஓம் அபிமுத்த விநாயக போற்றி
ஓம் அரிச்சந்திர விநாயக போற்றி
ஓம் அழகிய விநாயக போற்றி
ஓம் ஆசரசிருஷ்டி விநாயக போற்றி
ஓம் ஆக்கினை விநாயக போற்றி
ஓம் ஆமோத விநாயக போற்றி

ஓம் ஆண்ட விநாயக போற்றி
ஓம் ஆதி விநாயக போற்றி
ஓம் ஆழத்துப் பிள்ளையார் போற்றி
ஓம் உபதாப விநாயக போற்றி
ஓம் உச்சி பிள்ளையார் போற்றி
ஓம் உடுண்டி விநாயக போற்றி
ஓம் ஊர்த்துவாண்டமுண்ட விநாயக போற்றி
ஓம் ஏகதந்த  விநாயக போற்றி
ஓம் ஏரம்ப விநாயக போற்றி
ஓம் ஏகோபயப்பிரத விநாயக போற்றி

ஓம் கசகன்ன விநாயக போற்றி
ஓம் கண்டா விநாயக போற்றி
ஓம் கணப விநாயக போற்றி
ஓம் கற்பகப் பிள்ளையார் போற்றி
ஓம் கல்முத்து விநாயக போற்றி
ஓம் கஜான விநாயக போற்றி
ஓம் கணேசர் விநாயக போற்றி
ஓம் கணபதி விநாயக போற்றி
ஓம் கபில விநாயக போற்றி
ஓம் கங்கை கணபதி போற்றி

ஓம் கடுக்காய் விநாயக போற்றி
ஓம் கருக்கடி விநாயக போற்றி
ஓம் கள்ளவாரணப் பிள்ளையார் போற்றி
ஓம் கார்த்தி விநாயக போற்றி
ஓம் குலப்பிரிய விநாயக போற்றி
ஓம் கூபதந்த விநாயக போற்றி
ஓம் கூப்பிடு பிள்ளையார் போற்றி
ஓம் கூர்நிதாக்ஷ விநாயக போற்றி
ஓம் கைகாட்டி விநாயக போற்றி
ஓம் கோடி விநாயக போற்றி

ஓம் சந்திர விநாயக போற்றி
ஓம் சலாடக விநாயக போற்றி
ஓம் சதுர்த்தி விநாயக போற்றி
ஓம் சமுசிக விநாயக போற்றி
ஓம் சித்தி விநாயக போற்றி
ஓம் சித்தரூப விநாயக போற்றி
ஓம் சிங்கமுக விநாயக போற்றி
ஓம் சிந்தாமணி விநாயக போற்றி
ஓம் சித்தி புத்தி விநாயக போற்றி
ஓம் சிவப்பிரகாச விநாயக போற்றி

ஓம் சிகாமணி விநாயக போற்றி
ஓம் சுமுக விநாயக போற்றி
ஓம் சுந்தர கணபதி போற்றி
ஓம் சுமங்கள விநாயக போற்றி
ஓம் சூதவனப் பிள்ளையார் போற்றி
ஓம் செவிசாய்த்த விநாயக போற்றி
ஓம் செல்வ விநாயக போற்றி
ஓம் சொர்ண விநாயக போற்றி
ஓம் தந்தவக்கிர விநாயக போற்றி
ஓம் தரணிதர விநாயக போற்றி

ஓம் தால மூல விநாயக போற்றி
ஓம் திரிமுக  விநாயக போற்றி
ஓம் திருமுறைசுட்டிய விநாயக போற்றி
ஓம் துண்டி விநாயக போற்றி
ஓம் துர்க்கை விநாயக போற்றி
ஓம் துன்முக விநாயக போற்றி
ஓம் துவாரக விநாயக போற்றி
ஓம் துன்பந்தீர்க்கும் விநாயக போற்றி
ஓம் துணைவந்த விநாயக போற்றி
ஓம் தூமகேது விநாயக போற்றி

ஓம் நீச விநாயக போற்றி
ஓம் பஞ்சமி விநாயக போற்றி
ஓம் பஞ்சமுக விநாயக போற்றி
ஓம் பந்து விநாயக போற்றி
ஓம் பாகீரத விநாயக போற்றி
ஓம் பாலசந்திர விநாயக போற்றி
ஓம் பால விநாயக போற்றி
ஓம் பிரசன்ன விநாயக போற்றி
ஓம் பிரணவ விநாயக போற்றி
ஓம் பிரவாள விநாயக போற்றி

ஓம் மந்திர விநாயக போற்றி
ஓம் மகோற்கடர் விநாயக போற்றி
ஓம் மயூரேசர் விநாயக போற்றி
ஓம் முழுமுதற்கடவுள் விநாயக போற்றி
ஓம் முண்ட விநாயக போற்றி
ஓம் மூஷிகவாகன விநாயக போற்றி
ஓம் மோதகப் பிரிய விநாயக போற்றி
ஓம் மோதக விநாயக போற்றி
ஓம் யானை முகத்து விநாயக போற்றி

ஓம் லம்போதர விநாயக போற்றி
ஓம் வக்ரதுண்டாய விநாயக போற்றி
ஓம் வக்கிரதுண்ட விநாயக போற்றி
ஓம் வரத விநாயக போற்றி
ஓம் வல்லாள விநாயக போற்றி
ஓம் வசிஷ்ட விநாயக போற்றி
ஓம் வன்னி விநாயக போற்றி
ஓம் வாமன விநாயக போற்றி
ஓம் விக்கின விநாயக போற்றி
ஓம் விடாங்க விநாயக போற்றி

ஓம் விராசபுத்திர விநாயக போற்றி
ஓம் விக்கினராஜ விநாயக போற்றி
ஓம் விக்னேஸ்வர விநாயக போற்றி
ஓம் வினை தீர்க்கும் விநாயக போற்றி
ஓம் விஷ்ணு விநாயக போற்றி
ஓம் வீம விநாயக போற்றி
ஓம் வீர சுத்தி விநாயக போற்றி

ஆதாரம்:  http://temple.dinamalar.com/Slogandetails.php?id=1473

36)கணேசர் போற்றி

ஓம் விநாயகனே போற்றி
ஓம் வினைகள் தீர்ப்பவனே போற்றி
ஓம் அரசமரத்தடி அமர்ந்தவனே போற்றி
ஓம் அகந்தை அழிப்பவனே போற்றி
ஓம் அறுகினில் மகிழ்பவனே போற்றி
ஓம் அச்சம் தவிப்பவனே போற்றி
ஓம் ஆனை முகத்தோனே போற்றி
ஓம் ஆறுமுகன் சோதரனே போற்றி
ஓம் ஆதி மூலமே போற்றி
ஓம் ஆனந்த உருவே போற்றி

ஓம் இமவான் சந்ததியே போற்றி
ஓம் இடரைக் களைவோனே போற்றி
ஓம் ஈசன் மகனே போற்றி
ஓம் ஈகை <உருவே போற்றி
ஓம் உண்மை வடிவே போற்றி
ஓம் உலக நாயகனே போற்றி
ஓம் ஊறும் களிப்பே போற்றி
ஓம் ஊழ்வினை அறுப்பவனே போற்றி
ஓம் எளியவனே போற்றி
ஓம் எந்தையே போற்றி

ஓம் எங்குமிருப்பவனே போற்றி
ஓம் எருக்கு அணிந்தவனே போற்றி
ஓம் ஏழை பங்காளனே போற்றி
ஓம் ஏற்றம் அளிப்பவனே போற்றி
ஓம் ஐயனே போற்றி
ஓம் ஐங்கரனே போற்றி
ஓம் ஒப்பிலாதவனே போற்றி
ஓம் ஒதுக்க முடியாதவனே போற்றி
ஓம் ஒளிமய உருவே போற்றி
ஓம் ஒளவைக்கருளியவனே போற்றி

ஓம் கருணாகரனே போற்றி
ஓம் கரணத்தில் மகிழ்பவனே போற்றி
ஓம் கணேசனே போற்றி
ஓம் கணநாயகனே போற்றி
ஓம் கண்ணிற்படுபவனே போற்றி
ஓம் கலியுக நாதனே போற்றி
ஓம் கற்பகத்தருவே போற்றி
ஓம் கந்தனுக்குதவியவனே போற்றி
ஓம் கிருபாநிதியே போற்றி
ஓம் கீர்த்தி அளிப்பவனே போற்றி

ஓம் குட்டில் மகிழ்பவனே போற்றி
ஓம் குறைகள் தீர்ப்பவனே போற்றி
ஓம் குணநிதியே போற்றி
ஓம் குற்றம் பொறுப்போனே போற்றி
ஓம் கூவிட வருவோய் போற்றி
ஓம் கூத்தன் மகனே போற்றி
ஓம் கொள்ளை கொள்வோனே போற்றி
ஓம் கொழுக்கட்டைப் பிரியனே போற்றி
ஓம் கோனே போற்றி
ஓம் கோவிந்தன் மருகனே போற்றி

ஓம் சடுதியில் வருபவனே போற்றி
ஓம் சங்கரன் புதல்வனே போற்றி
ஓம் சங்கடஹரனே போற்றி
ஓம் சதுர்த்தி நாயகனே போற்றி
ஓம் சிறிய கண்ணோனே போற்றி
ஓம் சித்தம் கவர்ந்தோனே போற்றி
ஓம் சுருதிப் பொருளே போற்றி
ஓம் சுந்தரவடிவே போற்றி
ஓம் ஞாலம் காப்பவனே போற்றி
ஓம் ஞான முதல்வனே போற்றி

ஓம் தந்தம் உடைந்தவனே போற்றி
ஓம் தந்தத்தாற் எழுதியவனே போற்றி
ஓம் தும்பிக்கை உடையாய் போற்றி
ஓம் துயர் துடைப்பவனே போற்றி
ஓம் தெருவெலாம் காப்பவனே போற்றி
ஓம் தேவாதி தேவனே போற்றி
ஓம் தொந்தி விநாயகனே போற்றி
ஓம் தொழுவோ நாயகனே போற்றி
ஓம் தோணியே போற்றி
ஓம் தோன்றலே போற்றி

ஓம் நம்பியே போற்றி
ஓம் நாதனே போற்றி
ஓம் நீறணிந்தவனே போற்றி
ஓம் நீர்க்கரையமர்ந்தவனே போற்றி
ஓம் பழத்தை வென்றவனே போற்றி
ஓம் பாரதம் எழுதியவனே போற்றி
ஓம் பரம்பொருளே போற்றி
ஓம் பரிபூரணனே போற்றி
ஓம் பிரணவமே போற்றி
ஓம் பிரம்மசாரியே போற்றி

ஓம் பிள்ளையாரே போற்றி
ஓம் பிள்ளையார்பட்டியானே போற்றி
ஓம் பிறவிப்பிணி தீர்ப்பவனே போற்றி
ஓம் பிள்ளைகளை ஈர்ப்பவனே போற்றி
ஓம் புதுமை வடிவே போற்றி
ஓம் புண்ணியனே போற்றி
ஓம் பெரியவனே போற்றி
ஓம் பெரிய உடலோனே போற்றி
ஓம் பேரருளாளனே போற்றி
ஓம் பேதம் அறுப்போனே போற்றி

ஓம் மஞ்சளில் இருப்பவனே போற்றி
ஓம் மகிமையளிப்பவனே போற்றி
ஓம் மகாகணபதியே போற்றி
ஓம் மகேசுவரனே போற்றி
ஓம் முக்குறுணி விநாயகனே போற்றி
ஓம் முதலில் வணங்கப்படுவோனே போற்றி
ஓம் முறக்காதோனே போற்றி
ஓம் முழுமுதற்கடவுளே போற்றி
ஓம் முக்கணன் மகனே போற்றி
ஓம் முக்காலம் அறிந்தோனே போற்றி

ஓம் மூத்தோனே போற்றி
ஓம் மூஞ்சுறு வாகனனே போற்றி
ஓம் வல்லப கணபதியே போற்றி
ஓம் வரம்தரு நாயகனே போற்றி
ஓம் விக்னேஸ்வரனே போற்றி
ஓம் வியாஸன் சேவகனே போற்றி
ஓம் விடலைக்காய் ஏற்பவனே  போற்றி
ஓம் வெற்றியளிப்பவனே போற்றி

மூலம்:  http://temple.dinamalar.com/Slogandetails.php?id=1472

37)நாம் விநாயகரை வணங்கும் பொழுது எமது தலையிலே குட்டி வணங்குவதன் காரணம் என்ன?

எந்த ஓரு வேலையைச் செய்யத் தொடங்கும் பொழுதும் முதலில் விநாயகர் வணக்கம் செய்யப்படுவது முக்கியமாகும். கரங்களை முட்டியாகப் பிடித்து மூன்று முறை தலையிலே குட்டிக்கொள்ள வேண்டும். இவ்வாறு தலையில் குட்டிக்கொள்ளும் பொழுது மத்தகத்திலிருக்கும் அமிர்தமானது சுரந்து சுழுமுனாநாடி (தண்டுவடம்) வழியாக மூலாதாரத்தில் ஒளிரூபமாகவிருக்கும் விநாயகரைச் சென்றடைந்து அபிசேக மாகின்ற பொழுது அவரின் அருள் கிடைக்குமென்ற வெளிப்பாடாகவே செய்யப்படுகின்றது. அத்தோடு முனனொரு காலத்தில் காக்கை உருவெடுத்து விநாயகப் பெருமான் அகத்தியரின் கமண்டலத்தினைக் கவிழ்த்து அதிலிருந்த நீரைக் காவிரி நதியாக ஓடவைத்த பொழுது நிட்டையிலிருந்த அகத்திய முனிவரானவர் கோபங் கொண்டு காக்கையினை விரட்டினார். அப்பொழுது காக்கையானது ஒரு சிறுவனாக வடிவம் கொண்டு ஓடியபொழுது முனிவரும் அச்சிறுவனைத் துரத்திச் சென்று அவனது தலையில் குட்டினார். தலையில் குட்டு வாங்கியதும் சிறுவனாக நின்ற விநாயகப் பெருமான் தனது திருச் சொரூபத்தினை அகத்தியருக்குக் காண்பித்தார். உடனே விநாயகப் பெருமானை வணங்கிய அகத்திய முனிவரானவர் தான் செய்த தவறை உணர்ந்து தனது இரண்டு கைகளினாலும் தனது தலையிலே குட்டி தோப்புக்கரணம் செய்து தன்னை மன்னித்தருளுமாறு விநாயகரை வேண்டியதாக புராண வரலாறுகள் கூறுகின்றன. இதன் பாவனையாகவே நாமும் தலையிலே குட்டி தோப்புக்கரணமிட்டு விநாயகரை வணங்குகின்றோம். விநாயகரை வணங்கி ஆரம்பிக்கின்ற வேலைகள் யாவும் தடையின்றி நிறைவுபெறும் என்பதனால்தான் கோவிற்கிரிகைள் உட்பட எல்லாச்சந்தர்ப்பங்களிலும் விநாயகர் வழிபாடு முதலிடத்தை வகிக்கின்றது.

38)விநாயகரை எந்த  இலை கொண்டு வழிபட வேண்டும்?

விநாயகரை எந்த இலை கொண்டு வழிபட்டால், என்ன பலன் கிடைக்கும் என விநாயகர் புராணம் கூறுகிறது. மகப்பேறு பெற மருத இலை, எதிரிகளின் தொல்லை நீங்க அரச இலை, இதர துன்பங்கள் நீங்க அகத்தி இலை, சுகமான வாழ்வு பெற வில்வ இலை, சுகமான வாழ்வு பெற வெள்ளெருக்கு இலை, புகழ் பெற மாதுளை இலை, லட்சுமி கடாட்சம் பெற கண்டங்கத்திரி இலை ஆகியவற்றால் பூஜிக்க வேண்டும். அருகம்புல், செம்பருத்தி, வெள்ளெருக்கு, மாவிலை இவைகளை கொண்டு அர்ச்சனை செய்தால் இவை எல்லாவற்றையும் ஒன்றாக அடையலாம்.

நன்றி:  http://temple.dinamalar.com/news_detail.php?id=1130

39)விநாயகர் 

ஆனைமுகப் பெருமானை போற்றிப் பூஜிக்கும் திருநாளான விநாயக சதுர்த்தி ஆண்டு தோறும் ஆவணித் திங்கள் அமாவாசையை அடுத்த சதுர்த்தியன்று (சுக்ல பட்ச சதுர்த்தி) கோலாகலமாக நாடெங்கும் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி சனிக்கிழமை விநாயக சதுர்த்தி தினம்.

40)இல்லந்தோறும் நடக்கம் இனிய பூஜை!

வீடுதோறும் களி மண்ணால் செய்த பிள்ளையார் சிலைகளை வண்ணக் குடையுடன் வாங்கி வந்து, எருக்கம் பூ அணிவித்து, அருகம்புல், செவ்வந்தி, மல்லிகை, அரளி போன்ற மலர்களால் அர்ச்சனை செய்வது வழக்கம். ஐங்கரனுக்கு விருப்பமான கொழுக்கட்டை, அப்பம், சுண்டல், வடை, அவல், பொரி என நிவேதனங்கள் செய்கிறோம். வாழை, திராட்சை, நாவல், விளாம்பழம், கரும்புத் துண்டுகள், ஆப்பிள் என மிகவும் பிரியமுடன் தும்பிக்கையானுக்கு அளிக்கிறோம். அறிவு தெளிந்த ஞானம் முதலிவற்றை அளித்து எடுத்த செயல்கள் தடைவரா வண்ணம் காத்தருள வேண்டுகிறோம்.

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன்-கோலம் செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே! நீ எனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா!

என்று ஒளவையார் பாடியது போல் இறைவனை வாழ்வில் நலம் பெற வேண்டி நிற்கின்றோம். மறுநாள் புனர் பூஜை என்று சொல்லப்படும், சிறு பூஜை செய்து, நல்ல நேரம் பார்த்து, பிள்ளையார் சிலைகளை எடுத்துச் சென்று கிணற்றிலோ, குளத்திலோ, ஆற்றிலோ விட்டு விடுவது வழக்கம்.

41)நாமம் பல தத்துவம் ஒன்று!

வரசித்தி விநாயகர், இஷ்டசித்தி விநாயகர், விக்ன நிவாரண கணபதி, வல்லப விநாயகர், சித்திபுத்தி விநாயகர் என்றெல்லாம் பல பெயர்கள் விளங்கினாலும் விநாயகரின் தத்துவம் ஒன்றே. ஈசன் மகனான கணபதியைத் துதித்த பின்பே எந்தச் செயலையும் தொடங்குகிறோம். கேட்ட வரம் தரும் பிள்ளைக் குணம் கொண்டு, என்றும் எவர்க்கும் பிள்ளையாகத் திகழ்வதால் பிள்ளையாராகினார் அந்த கணேசன்.

இவ்விழா கொண்டாடப் படுவதற்குப் பின்னணியாக ஸ்காந்த புராணத்தில் ஒரு கதை சொல்லப்படுகிறது.

42)விநாயக சதுர்த்தி வரலாறு!

பரமசிவன் கணேசனை கணங்களின் தலைவனாக ‘கணபதி’யாக நியமித்தார். அவருக்கு அனிமா, மகிமா முதலிய அஷ்டசித்திகளையும் மனைவிகளாக பிரம்மதேவன் அளித்து கணபதியைப் பலவாறு துதி செய்தார். கணபதியும் மகிழ்ந்து ‘பிரம்மனே, வேண்டிய வரம் கேள் ‘ என்று கூற பிரம்மன் ‘என் படைப்பெல்லாம் தங்கள் அருளால் இடையூரின்றி நிறைவேற வேண்டும்’ என்று வரம் கேட்க விநாயகரும் பிரம்மனுக்கு வரமளித்தார்.

 

43)Lord Ganesha
Lord Ganesha – the Hindu deity in a human form but with the head of an elephant – represents the power of the Supreme Being that removes obstacles and ensures success in human endeavors. For this reason, Hindus worship Ganesha first before beginning any religious, spiritual or worldly activity. In Hindu mythology, Lord Ganesha is the first son of Lord Shiva and the Divine Mother Parvati. Their second son is Lord Subramanya and their daughter is Jyoti. As explained below, the portrayal of Lord Ganesha as the blend of human and animal parts symbolizes the ideals of perfection as conceived by Hindu sages and illustrates some philosophical concepts of profound spiritual significance.

  • Elephant head, wide mouth, and large ears: the large head of an elephant symbolizes wisdom, understanding, and a discriminating intellect that one must possess to attain perfection in life. The wide mouth represents the natural human desire to enjoy life in the world. The large ears signify that a perfect person is the one who possesses a great capacity to listen to others and assimilate ideas.
  • The trunk and two tusks with the left tusk broken: there is no known human instrument that has an operating range as wide as that of an elephant’s trunk. It can uproot a tree and yet lift a needle off the ground. Likewise, the human mind must be strong enough to face the ups and downs of the external world and yet delicate enough to explore the subtle realms of the inner world. The two tusks denote the two aspects of the human personality, wisdom and emotion. The right tusk represents wisdom and the left tusk represents emotion. The broken left tusk conveys the idea that one must conquer emotions with wisdom to attain perfection.
  • Elephant eyes: the elephant eyes are said to possess natural deceptiveness that allows them to perceive objects to be bigger than what they really are. Thus the elephant eyes symbolize the idea that even if an individual gets “bigger and bigger” in wealth and wisdom, he should perceive others to be bigger than himself; that is, surrender one’s pride and attain humility.
  • The four arms and various objects in the four hands: the four arms indicate that the Lord is omnipresent and omnipotent. The left side of the body symbolizes emotion and the right side symbolizes reason. An axe in the upper left hand and a lotus in the upper right hand signify that in order to attain spiritual perfection, one should cut worldly attachments and conquer emotions. This enables one to live in the world without being affected by earthly temptations, just as a lotus remains in water but is not affected by it. A tray of Laddus (a popular snack) near the Lord denotes that He bestows wealth and prosperity upon His devotees. The lower right hand is shown in a blessing pose, which signifies that Ganesha always blesses His devotees.
  • A human body with a big belly: the human body possesses a human heart, which is a symbol of kindness and compassion toward all. Ganesha’s body is usually portrayed wearing red and yellow clothes. Yellow symbolizes purity, peace and truthfulness. Red symbolizes the activity in the world. These are the qualities of a perfect person who perforrns all duties in the world, with purity, peace, and truthfulness. The big belly signifies that a perfect individual must have a large capacity to face all pleasant and unpleasant experiences of the world.
  • A mouse sitting near the feet of Ganesha and gazing at the tray of Laddus: a mouse symbalizes the ego that can nibble all that is good and noble in a person. A mouse sitting near the feet of Ganesha indicates that a perfect person is one who has conquered his (or her) ego. A mouse gazing at the Laddus, but not consuming them, denotes that a purified or controlled ego can live in the world without being affected by the worldly temptations. The mouse is also the vehicle of Ganesha, signifying that one must control ego in order for wisdom to shine forth.
  • Right foot dangling over the left foot: as stated above, the left side of the body symbolizes emotion and the right side symbolizes reason and knowledge. The right foot dangling over the left foot illustrates that in order to live a successful life one should utilize knowledge and reason to overcome emotions.

Bansi Pandit

 

நன்றி : http://www.koausa.org/Gods/God8.html

44)பிள்ளையாருக்கு 21 பெயர்கள்

எளியவர்களுக்கெல்லாம் எளியவராய் விளங்கும் விநாயகர் பெரும்பாலும் அரச மரத்தடி, குளக்கரை போன்ற இடங்களில் அமர்ந்துதான் தரிசனம் தருகிறார். இவருக்கு படைக்கப்படும் பொருட்களும் எளிமையானவையே.

கவனிப்பாரற்று காட்டில் பூத்துக் கிடக்கும் எருக்கம் பூ, வாய்க்கால் வரப்புகளில் பரவலாக முளைந்திருக்கும் அறுகம்புல் போன்ற மிக எளிமையான பொருட்களைத் தாம் ஏற்றுக் கொண்டு, தன் பக்தர்களுக்கு அருளை வெள்ளமென பெருக்கி அருள்கிறார். இவருக்கு இருபத்தோரு திருநாமங்கள் உள்ளதாக புராணங்கள் சொல்கின்றன. என்ன அவை?

கணேசன்:

உலக உயிர்களுக்கும், பிரம்மத்துக்கும் தலைவன்.

ஏகதந்தன்:

ஏக எனில் மாயை; தந்தன் எனில் மறைந்திருப்பவன். மாயைக்கு ஆட்படாமல் விலகி நிற்பவன் இவன். ஏகம் என்றால் ஒன்று என்றும் ஒரு பொருள் உண்டு. வியாசர் சொல்லச் சொல்ல, மகாபாரதத்தை, தன் தந்தம் ஒன்றை உடைத்து எழுதியதால், எஞ்சிய ஒரு தந்தத்துடன் விளங்குபவர் என்றும் கொள்ளலாம்.

சிந்தாமணி:

சிந்தை – மனம்; மணி – பிரகாசம். பக்தர் தம் மனதில் அஞ்ஞான இருள் நீக்கி, ஒளி பரவச் செய்பவன்.

விநாயகன்:

வி – நிகரற்ற; நாயகன் – தலைவன். தனக்கு யாரும் நிகரில்லாத தலைவன்.

டுண்டிராஜன்:

மோட்சத்தை அடைய விரும்புவோருக்கு வழிகாட்டுபவர்.

மயூரேசன்:

வணங்காதவரை மாயையில் மூழ்கச் செய்தும், பக்தர்களை மாயை நெருங்காமலும் செய்பவன்.

லம்போதரன்:

உலகினையே உள்ளடக்கியிருப்பதால் பெரிதாகக் காணப்படும் வயிற்றினை உடையவன்.

கஜானனன்:

ஆணவம் எனும் யானையை அடக்கும் வல்லமை உள்ளவன்,  யானைமுகன்.

ஹேரம்பன்:

ஹே – கஷ்டப்படுபவர்கள். ரம்ப – காப்பவன் ஆகிய பிரம்மன். துன்பப்படுவோரைக் காத்து ரட்சிப்பவன்.

வக்ர துண்டன்:

பக்தர் தம் வாழ்வில் வரும் தீமைகளை தடுப்பவன். பிள்ளையாருக்கு இப்பெயரை அன்னை உமாதேவி வைத்தார்.

ஜேஷ்டராஜன்:

ஜேஷ்டன் – முன்னவன், அனைத்துக்கும் முதல்வனாக, முதற் பொருளாகத் தோன்றி, அனைத்து உயிரினங்களையும் வழிநடத்திச் செல்பவன்.

நிஜஸ்திதி:

உலகில் உள்ள அனைத்து உயிர்களாகவும் இருப்பவன்.

ஆசாபூரன்:

எல்லோரது ஆசைகளையும் நிறைவேறச் செய்பவன். இப்பெயரை கணபதிக்கு சூட்டியவர் புருசுண்டி முனிவர்.

வரதன்:

வேண்டுவோர் வேண்டும் வரமளிப்பவன்.

விகடராஜன்:

மாயையான உலகில், உண்மை பரம்பொருளாகத் திகழ்பவன்.

தரணிதரன்:

பூமியை ஆபரணமாக அணிந்து எப்போதும் காப்பவன்.

சித்தி – புத்தி பதி:

சித்தி எனும் கிரியா சக்திக்கும், புத்தி எனும் இச்சா சக்திக்கும் இடையே அவற்றின் தலைவனாக இருந்து ஞானத்தை அளிப்பவன்.

பிரும்மணஸ்தபதி:

இப்பெயர், பிரம்மாவினால் வைக்கப்பட்டது. பிரும்மம் என்றால் சப்தம். வேத சப்தத்திற்கு ஆதாரமாக விளங்குபவர்.

மாங்கல்யேசர்:

அழியக்கூடிய உலகில், தான் மட்டும் அழியாமலிருந்து அனைத்தையும் பரிபாலிப்பவர்.

சர்வ பூஜ்யர்:

எங்கும் எத்தகைய பூஜைகளிலும், எல்லா தெய்வ வழிபாட்டின் போதும் முன்னதாக பூஜிக்கப்படக்கூடியவர். எல்லோராலும் வணங்கப்படுபவர்.

விக்னராஜன்:

தன்னை வணங்கும் பக்தர்கள் அனைவரது வாழ்விலும் எந்த விக்னமும் ஏற்படாமல் காப்பவர்.

45)விநாயகரின் 32 வடிவங்கள்

 
விநாயகரைப் பல்வேறு இடங்களில் சுமார் 32 வடிவங்களில் பல பெயர்களால் அழைத்து வணங்கி வருகிறார்கள். அவை,1. யோக விநாயகர்
2. பால விநாயகர்
3. பக்தி விநாயகர்
4. சக்தி விநாயகர்
5. சித்தி விநாயகர்
6. வீர விநாயகர்
7. விக்ன விநாயகர்
8. வெற்றி விநாயகர்
9. வர விநாயகர்
10. உச்சிஷ்ட விநாயகர்
11. உத்தண்ட விநாயகர்
12. ஊர்த்துவ விநாயகர்
13. ஏரம்ப விநாயகர்
14. ஏகாட்சர விநாயகர்
15. ஏக தந்த விநாயகர்
16. துவி முக விநாயகர்
17. மும்முக விநாயகர்
18. துவிஜ விநாயகர்
19. துர்கா விநாயகர்
20. துண்டி விநாயகர்
21. தருண விநாயகர்
22. இரணமோசன விநாயகர்
23. லட்சுமி விநாயகர்
24. சிங்க விநாயகர்
25. சங்கடஹுர விநாயகர்
26. சுப்ர விநாயகர்
27. சுப்ர பிரசாத விநாயகர்
28. ஹுரித்திரா விநாயகர்
29. திரியாட் சர விநாயகர்
30. சிருஷ்டி விநாயகர்
31. நிருத்த விநாயகர்
32. மகா விநாயகர்

ஆதாரம்: http://srinmpk.blogspot.co.uk/2010/09/32.html

46)vinayagar_valipadu(2)

47)சதுர்த்தி திதி கணேசருக்கு மிகவும் உகந்த நன்னாள். சுக்ல பட்ச (வளர்பிறை) சதுர்த்தியை வரசதுர்த்தி என்றும் கிருஷ்ண பட்ச (தேய்பிறை சதுர்த்தியை) சங்கடஹர சதுர்த்தி என்றும், சங்கஷ்டஹர சதுர்த்தி என்றும் கூறுவர். நடுப்பகல் வரையுள்ள சுக்ல சதுர்த்தியும், இரவில் சந்திரோதயம் வரை நீடிக்கின்ற கிருஷ்ண சதுர்த்தியும் விரதத்திற்கேற்றவை. சங்கட ஹர சதுர்த்தியில் பகலில் உபவாசம் இருப்பர். இரவு சந்திரனை கண்டதும் அர்க்கியம் தந்து, பூஜையை முடித்து பின் உண்பர்.

ஆதிசேஷன் நாரதரது உபதேசப்படி சங்கட ஹர சதுர்த்தி விரதமிருந்தார். விநாயகரது திருவருளால் சிவபெருமாள் முடியில் இருக்கும் பேறு பெற்றார். அவனியைத் தாங்கவும், விநாயகருக்கு உதரபந்தனமாக இருக்கவும் திருமாலின் படுக்கையாகவும் ஆகும் வரம் பெற்றார்.

சங்கர ஹர சதுர்த்தி விரதத்தை மாசி மாதம் கிருஷ்ணபட்சம் (தேய்பிறை) செவ்வாய்க்கிழமையோடு வரும் சதுர்த்தி திதியில் துவங்கி ஓராண்டு விதிப்படி அனுஷ்டித்தால் எல்லாத் துன்பங்களும் நீங்கப் பெறுவார்கள். செல்வம், செல்வாக்கு ஆகிய அனைத்து இன்பங்களையும் அடைவார்கள். ஆவணி மாதத்தில் வரும் தேய்பிறை சதுர்த்தியிலிருந்து 12 மாதங்கள் பிரதி மாதமும் அனுஷ்டித்து, விநாயகர் சதுர்த்திக்கு முந்திய தேற்பிறை சதுர்த்தியான மஹா சங்கட ஹர சதுர்த்தியன்று முடிக்கும் மரபும் உண்டு.

இவ் விரதத்தை ஓராண்டு, அதாவது விநாயகர் சதுர்த்திக்குப் பிறகு வரும் சங்கட ஹர சதுர்த்தியிலிருந்து மஹா சங்கடஹர சதுர்த்தி வரை, உறுதியுடன் அனுஷ்டிப்பவர்கள் எல்லா நலன்களையும் பெறுவர். இத்தகைய சக்தி வாய்ந்த சங்கடஹர சதுர்த்தி விரதத்தை வருடம் முழுவதும் அனுஷ்டிக்க முடியாதவர்கள், மஹா சங்கட ஹர சதுர்த்தி தினத்திலாவது அனுஷ்டித்தால் ஒரு வருடம் விரதம் கடைபிடிக்க பலனை விநாயகரின் அருளால் பெறுவார்கள் என்பது உறுதி.

ஆதாரம்: http://www.penmai.com

48)விநாயகருக்குரிய 11 விரதங்கள்

1.வெள்ளிக்கிழமை விரதம்
2. செவ்வாய்க்கிழமை விரதம்
3. சதுர்த்தி விரதம்
4. குமார சஷ்டி விரதம்
5. தூர்வா கணபதி விரதம்
6. சித்தி விநாயகர் விரதம்
7.துர்வாஷ்டமி விரதம்
8. நவராத்திரி விரதம்
9.வெள்ளிப்பிள்ளையார் விரதம்
10. செவ்வாய்ப்பிள்ளையார் விரதம்
11. சங்கட ஹர சதுர்த்தி விரதம்
இவ்விரதங்களில் ஆவணி மாதத்தில் வரும் சதுர்த்தி
விரதம் மிகவும் முக்கியமானதாகும்

49)விநாயகா

விநாயகனே வினைதீர்ப்பவனே

வேழமுகத்தோனே ஞால முதல்வனே

விநாயகனே வினைதீர்ப்பவனே

வேழமுகத்தோனே ஞால முதல்வனேகுணாநிதியே குருவே சரணம்
குணாநிதியே குருவே சரணம்
குறைகள் களைய இதுவே தருணம்
குறைகள் களைய இதுவே தருணம்
(விநாயகனே)உமாபதியே உலகம் என்றாய்
ஒரு சுற்றினிலே வலமும் வந்தாய்
உமாபதியே உலகம் என்றாய்
ஒரு சுற்றினிலே வலமும் வந்தாய்
கணநாதனே மாங்கனியை உண்டாய்
கணநாதனே மாங்கனியை உண்டாய் ஆ ஆ
கதிர் வேலவனின் கருத்தில் நின்றாய்
கதிர் வேலவனின் கருத்தில் நின்றாய்
விநாயகனே வினைதீர்ப்பவனே
வேழமுகத்தோனே ஞால முதல்வனே
விநாயகனே வினைதீர்ப்பவனே
 
ஆதாரம்: http://radha-boomi.blogspot.co.uk/

50)விநாயகர் சிறப்பு செய்திகள்

* வக்ர துண்டர், மகோத்ரதர், கஜானனர், லம்போதரர், விகடர்,விக்னராஜர், தூமரவர்ணர், சூர்ப்பகர்ணர் என்னும் எட்டு அவதாரங்கள் விநாயகர் எடுத்ததாக விநாயகர்புராணம் கூறுகிறது.

* சாணம், களிமண், மஞ்சள், வெல்லம், சந்தனம், அரிசிமா ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் பிடித்து விநாயகரை வழிபடலாம். இதனையே “பிடித்து வைத்தால் பிள்ளையார்’ என்று சொலவடையாகக் கூறுவர்.
*முக்கனிகளும், கரும்பும் ஆகிய நான்கையும் நான்கு கரங்களில் ஏந்தி, ஐந்தாவது கையில் மோதகத்தை வைத்துக் கொண்டு இருப்பவர் பாலகணபதியாவார். சோடச விநாயகர் என்னும் பதினாறு விநாயகர்களில் இவரே முதலாமவர்.
*திங்கட்கிழமை வரும் சதுர்த்தியில் விநாயகரை வழிபட்டால் குழப்பம் நீங்கி மனத்தெளிவு உண்டாகும். புதனன்று வரும் சதுர்த்தியில் வழிபட்டால் கல்வித்தடை நீங்கும். வெள்ளியன்று சதுர்த்தி வழிபாடு செய்ய காரிய விக்னம் நீங்குவதோடு பாவம் அகலும்.
* லால்குடிக்கு அருகில் உள்ள அன்பில் தலத்தில் திருஞானசம்பந்தரின் தேவாரத்தை ரசித்துக் கேட்ட செவிசாய்த்த விநாயகர் அருள்புரிகிறார். மதுரை மீனாட்சியம்மன் கோயிலிலும், சிதம்பரம் நடராஜர் கோயிலிலும் முக்குறுணிவிநாயகராக வீற்றிருக்கிறார்.
* வளர்ந்து முற்றிய வெள்ளெருக்கு வேரில் விநாயகர் உருவம் இயல்பாகத் தோன்றிவிடும். சுயம்பு விநாயகரான இவரை வழிபடுவது சிறப்பாகும். சித்தர்கள் இதனை வழிபட்டு அஷ்டமாசித்திகளை அடைந்ததாகக் கூறுவர்.
* யானைமுகம் இல்லாமல் மனிதமுகத்தோடு இருக்கும் நரமுக கணபதி பூந்தோட்டத்திற்கு அருகில் உள்ள சிதலைப்பதியில் கோயில் கொண்டிருக்கிறார். விநாயகருக்கு யானைமுகம் வருவதற்கு முன் இருந்த நிலையில் இங்கு அருள்பாலிக்கிறார்.
* முருகப்பெருமானுக்கு வள்ளியை திருமணம் செய்வதில் துணைபுரிந்தவர் விநாயகரே. இதனை அருணகிரிநாதர் திருப்புகழில் “அக்குறமகளுடன் அச்சிறுமுருகனை அக்கண மணமருள் பெருமாளே’ என்று பாடியுள்ளார்.
* விநாயகப்பெருமானை முழுமுதல் கடவுளாகப் போற்றும் முறைக்கு “காணாபத்யம்’ என்று பெயர். இதன்படி, விநாயகரே படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்துதொழில்களை நடத்தி பிரபஞ்ச இயக்கத்தை நடத்துவதாகச் சொல்வர்.
* பரம்பொருள் பெரியவராக இருந்தாலும் அவரைத் தாங்கும் சக்தி நம் இதயத்திற்கு உண்டு என்பதைக் காட்டுவதற்காகவே பெரிய உருவம் கொண்ட விநாயகப்பெருமானுக்கு சிறிய மூஞ்சுறுவை வாகனமாக அமைத்தனர்.
* விநாயகர் சதுர்த்தியை ஒருநாள் விரதமாக கொண்டாடுகிறோம். ஆவணி சதுர்த்தியில் தொடங்கி புரட்டாசி வளர்பிறை சதுர்த்திவரை ஒருமாத விரதமாக மேற்கொள்ள வேண்டும் என்று விநாயகர் புராணம் கூறுகிறது.
* விநாயகரை வழிபட்டால் பலன் உடனடியாகக் கிடைக்கும் என்பர். குழந்தைக் கடவுள் என்பதால், வேண்டும் வரத்தை அருள்வதில் ஈடுஇணையற்றவர். “கணபதிபூஜை கைமேல் பலன்’ என்று இதனைச் சொல்வதுண்டு.
* திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி உக்ரதேவதையாக விளங்கியபோது, ஆதிசங்கரர் அம்பிகையின் நேர் எதிரில் விநாயகரைப் பிரதிஷ்டை செய்தார். அவ்விநாயகருக்கு உக்கிரம் தணித்த விநாயகர் என்றே பெயர். இவரை வழிபட மனசாந்தி கிடைக்கும்.
* நடனக்கலையில் வல்லவராக சிவபெருமான் விளங்குகிறார். அவருடைய பிள்ளையான விநாயகரும் நாட்டியம் ஆடுவதில் விருப்பம் கொண்டவர். இந்த நர்த்தனவிநாயகரை வழிபட்டால் மனதில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும்.
* ஜப்பானில் விநாயகர் காங்கி டெக் என்னும் புத்தமதக் கடவுளுடன் இணைந்து காட்சி தருகிறார். அங்கு இவருக்கு கவான்வின் ஷேர் விநாயக்ஷா என்ற பெயரால் அழைக்கப்படுகிறார். யோகப்பயிற்சியாளர்கள் இவரை விரும்பி வழிபடுவர்.
* மூலாதாரமாக ஆதிக்கு காரணமாக இருப்பவர் விநாயகப்பெருமான். எதையும் மங்களகரமாக முடித்து வைப்பவர் ஆஞ்சநேயர். இவ்விருவரும் இணைந்த கோலமே ஆதியந்தப்பிரபு. இவரை வழிபட்டால் தொடங்கும் செயல்கள் மங்கலமாய் நிறைவேறும்.
* இலங்கை கதிர்காமத்தில் விநாயகப்பெருமான் முறிவண்டி விநாயகர் என்ற பெயருடன் திகழ்கிறார். இவரை வழிபடாவிட்டால், வாகனத்தின் அச்சு முறிந்துவிடும் என்று நம்புகின்றனர். வாகனத்தில் பயணம் செய்பவர்கள் இவ்விநாயகரை வழிபட்டுச் செல்வர்.

51)மூல முதல்வன் – விக்னவிநாயகர்

மூல முதல்வனான விக்ன விநாயகர்  இருப்பிடமாக குறிப்பிடப்படுவது மூலாதாரம் ஆகும். அது ஓசையின் மூலமான ஓங்காரத்தின் பிறப்பிடமாகும். அதன் நிறம் மாணிக்க நிறம். இதுவே முக்கோண வீடு எனவும் நான்கு இதழ் கொண்ட தாமரையாகவும் கொள்ளப்படுகிறது.

மனித உடலின் ஆதாரங்களில் முதல் ஆதாரம் மூலாதாரம். மூலம், ஆதாரம் இரண்டும் ஒரே பொருள் தருவன.

மனிதனில் மூலாதாரம் அழுக்குகள் நிறைந்த இடம். ஆதார சக்தியானவள் அந்த அழுக்குகளில் இருந்தே மூலவரை தொற்றுவித்து முதல் தடையை தீர்த்து வைக்கிறார்.

மூலாதாரம் தொடங்கி முதல் மூன்று ஆதாரங்களும்  உலகியல்  இச்சையை தூண்டுவன. அங்கே எழுச்சியுண்டாகும் போது உடல் இச்சை அதிகமாக இருக்கும். ஆனாலும் இவைகளை கடந்தே ஒருவரின் ஆன்ம பயணம் தொடங்கியாக வேண்டும். மூலாதாரத்தின் குண்டலின் சக்தி தன்னை அடைய இறைவன் திருவுளம் கொண்டால் அங்கே இந்த முதல் மூன்றும் முதல் தடையாக எழும்.
இறைவனை அடையும் வைராக்கியம் மிகப்படும் போது இத்தடைகளை அவரே தலையை கொய்து அழித்து விடுவார். (விநாயகரின் மற்றும் பிரமனின் தலை கொய்தல்)

ஆனால், இந்த முதல் மூன்று சக்திகளும் ஆன்ம பயணத்திற்கு மிகுந்த தேவைப்படுவன. அதை முழுவதுமாக அழித்தல் உடல் உள்ளவரை சாத்தியமில்லை. ஆனால் சக்தி கொள்கை படி அதை ஒரு சக்தியில் இருந்து இன்னொரு சக்தியாக மாற்றிவிட முடியும். வடக்கு நோக்கிய ஆன்ம பயணத்தை முனைப்புடன் தொடங்கும் போது இந்த சக்திகளை உடல் இச்சை தருவதை விடுத்து ஆன்ம பயணத்திற்கு முழுமனதுடன் துணை புரியத் துவங்கும்.

முதல்வன்

முறையாக குண்டலின்  யோகம் பயில்பவர் எந்த புனித செயலை செய்ய ஆரம்பிக்கும் போதும் முதலில் மூல பந்தம் செய்துவிட்டால்  உடல் சிலிர்த்து பிராணன் கால் முதல் தலை வரை உடல் முழுவதும் பரவும். இதைச்செயது விட்டால் ஒருவருக்கு அந்தசெயலில் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு எந்த தடைகளையும் தாண்டி வரும் ஆற்றல்  தானாக வந்துவிடும்.

இதனாலேயே விநாயபெருமாளுக்கு எல்லாவற்றிலும் தானாக முதல் இடம் கிடைத்து விடுகிறது.

முப்புரங்கள்

சிவன் தலை கொய்தது இருவருக்கு. பிரமன் மற்றும் விநாயகர். பிரமன் மற்றொரு ஆதாரத்தின் அதிபதி. இன்னொருவரை முக்கண்ணால் எரித்துவிட்டார் அவர் மன்மதன்.

ஆக முதல் மூன்று ஆதாரங்களையும் தாண்டி வருவதற்கு மூன்றாவது கண்ணை திறக்க வேண்டும். இது ஆக்ஞா தியானத்தால் கைகூடும்.

சிவம் முப்புரங்களை எரித்ததை திருமூலர் கூறும் போது

அப்பணி செஞ்சுடை ஆதி புராதனன்
முப்புரஞ் செற்றனன் என்பர்கள் மூடர்கள்
முப்புர மாவது மும்மல காரியம்
அப்புரம் எய்தமை யாரறி வாரோ
பாடல் 343 – அட்டவிரட்டான ஸ்தலங்கள் – இரண்டாம் தந்திரம் – திருமந்திரம்

என்று முப்பரம் என்ற ஏதோ கோட்டைகளை சிவம் எரித்ததாக சொல்வார்கள், ஆனால் முப்புரம் என்பது மும்மல காரியமான ஆணவ கன்ம, மாயை போன்ற குணங்களே என்று தெளிவுற கூறுகிறார்.

அதே திருமூலர் “அழுக்கினை ஓட்டி அறிவை நிறையீர் ” என்கிறார்.

குண்டலினி

தென் குமரி முனையில் கன்னி சக்தி இறைவனை அடைய கடுந்தவம் இருப்பதாக கூறப்படுவதும் உடலின் தெற்கில் இருக்கும் குண்டலி சக்தியானவள் உடலின் வடக்கில் சென்று சகஸ்ராரத்தை அடைந்து இறைவனில் இரண்டற கலக்க விரும்பி காத்திருக்கும் நிலை ஆகும். இது ஒவ்வொருவர் உடலிலும் உள்ள சக்தியாகும்.

இரண்டு மனைவிகள்

விநாயகருக்கு இரண்டு மனைவிகளாக கூறுவார்கள். இறைவனிடத்தில் கூறப்படும் மனைவி என்ற ஸ்தானம் அவர்களது ஆற்றல் சக்தியை குறிக்கும். சக்தியை பெண்மைக்கு உதாரணமாக கூறுவதால் அதை நாம் மனித நிலையில் இருந்து பகுத்து பார்க்கிறோம்.

விநாயருக்கு சித்தி, புத்தி என இரண்டு சக்திகள் உண்டு. இவை முறையே இச்சா சக்தி, ஞான சக்தி எனப்படும். இச்சா சக்தி மோகத்தை, ஒருவித தூண்டுதலை கொடுக்கும். ஞான சக்தி புத்தியை வளர்க்கும். இவைகள் இயல்பாக பிரமனுடன்  படைப்புத்தொழிலுக்கு உதவும். எனவே தக்க தருணத்தில் இறைவனை நோக்கி திருப்பினால் நல்ல செயல்களை செய்ய உதவிடும்.

ஆனைமுகத்தான் (யானைமுகத்தான்)

யானை முகம் ஓங்காரத்தின் வடிவம். அதுவே மதம் என்ற ஆணவத்தின் அடையாளமும் ஆகும். ஒருபக்கம் ஒடிந்த தந்தம் ஆணவம் அழிந்த நிலை. ஆணவம் அழிந்து அதுவே ஞானத்திற்கும் பயன்படுகிறது. அதனால் அதை கையில் எழுதுவற்காக வைத்திருக்கிறார். அவரே இன்னொரு கையில் அங்குசம் வைத்திருப்பது யானையை (ஆணவத்தை) அடக்கும் கருவி. ஞாபக சக்திக்கும் யானையின் ஞாபகத்தை குறிப்பிடுவது கருத்தில் கொள்ளத்தக்கது.

ஞான சக்தியால் இச்சா சக்தியை இறைவன் துணையுடன் அடக்கி ஆள வேண்டும். ஆணவ அசுரனை அழித்ததும் இதே முருகனின் ஞானவேல் ஆகும். முழுவதும் அழிக்காமல் அதுவே ஆக்க சக்தியாகவும் பயன்படுகிறது. இது சக்தி உருமாற்றம்.

கணங்களின் அதிபதியான கணபதியின் பொருள் உணர்ந்து இறைவனை நாடி அவன் அருள் பெறுவோம்.

ஆதாரம்:  http://tamilnanbargal.com/node/26975

52)மூலாதாரம்

யோக சாத்திரங்களால் குறிப்பிடப்படும் சக்கரங்களில் ஆரம்ப சக்கரம் மூலாதாரம் ஆகும். உறங்கும் நிலையில் குண்டலினி சக்தியானது உறையும் இடமாக மூலாதாரம் சொல்லப்படுகிறது.

[தொகு] உடற்பகுதி

ஆண் உடலில் தண்டுவடதின் அடிப்பகுதியில், பிறப்புறுப்புகளுக்கும், மலத்துவாரத்திற்கும் இடையே அமைந்துள்ளது. பெண் உடலில் கருப்பையின் கழுத்துப்பகுதியில் அமைந்துள்ளது.

[தொகு] பெயர்க்காரணம்

மூலம் : வேர் அல்லது ஆதாரம் ; ஆதாரம்: இடம் அல்லது மையம். வேர்ப்பகுதி சுழல் மையம் எனலாம்.

[தொகு] குறியீடுகள்

மூலாதாரம் நான்கு இதழ்களையுடைய அடர்சிவப்பு தாமரை மலராக உருவகப்படுத்தப் படுகிறது. தாமரை இதழ்களின் மையப்பகுதியில் மஞ்சள் நிற சதுரம் உள்ளது. சதுரத்தின் மத்தியில், படைக்கும் ஆற்றலின் சின்னமாக ஒரு தலைகீழ் சிவப்பு முக்கோணம் உள்ளது. முக்கோணத்தினுள் மனிதனுடைய ஆவி உடலின் சின்னமாக புகை வண்ணத்தில் சுயம்பு லிங்கம் உள்ளது. உறங்கும் நிலையில் உள்ள குண்டலினியை சித்தரிக்கும் வகையில் சென்னிற பாம்பு மூன்றரை முறை தன்னுடைய வாலால் லிங்கத்தை சுற்றி வளைத்துள்ளது. ஏழு துதிக்கைகளையுடைய ஒரு யானையால் சிவப்பு முக்கோணம் தாங்கப்படுவதாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம்:http:/ta.wikipedia.org

53)ஆறு சக்கரங்கள்

மானிடர் உடலில் ஆறு சக்கரங்கள்(ஆதார மையங்கள்) உள்ளன. அவை மூலாதாரம், சுவாதிஷ்டானம்(நிராகுலம்), மனிப்பூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்கினை என்பன. துரியம் என்பது ஞானத்தின் வாயில் ஆகும். குண்டலினி யோகம் என்பது மூலாதாரத்தில் இருந்து துரியத்திற்கு உயிர் சக்தியை ஏற்றும் பயிற்சி ஆகும். சிலர் துரியம் என்ற வாயிலையும் சேர்த்து ஏழுச் சக்கரங்கள் என்பர்.

மேலதிகவிபரங்களுக்கு:http:http://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

54)ஏழு ஆதாரங்கள் என்ற சக்கரங்கள்

http://www.maharishipathanjali.com/2009/06/blog-post_24.html

55)சிவனே அனைத்திற்கும் மூலாதாரம்

தெய்வீக விளக்கங்கள்

 

56)நாயகர் அகவல்: ஒரு தத்துவ அறிமுகம்

விநாயகர் அகவல் என்னும் நூல் ஔவைப் பிராட்டியாரால் அருளிச் செய்யப்பட்டது. இது தமிழ்ச் சைவர்களின் நித்திய பாராயண நூல்களில் ஒன்றாக விளங்குகின்றது. தமிழர்கள் கைக்கொண்டொழுகிய வழிபாட்டுநெறியோடு யோகநெறியையும் விளக்கியருளும் சிறப்பு வாய்ந்தது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்த நூல் தமிழருக்கு அறிவிக்கும் அரிய செய்திகளை இக்கட்டுரை திரட்டித் தருகின்றது. இக்கருத்துக்கள் சைவசித்தாந்தப் பேராசிரியர் திரு இரா.வையாபுரியார் அவர்கள் விநாயகர் அகவலுக்கு எழுதியுள்ள பேருரையினின்றும் திரட்டப் பட்டது.

‘சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார் செல்வர், சிவபுரத்திலுள்ளார்’. விநாயகர் அகவலைப் பாராயணம் செய்யும்போது இப்பொருள்கள் நினைவுக்கு வந்து பாராயணத்தைப் பயனுடையதாக்கும்.

இந்நூல் 15ஆவது வரி ‘அற்புதம் நின்ற கற்பகக் களிறே’ என்று கூறுவதால் இந்நூலில் கூறப்படும் விநாயகப் பெருமானின் திரு நாமம் ‘கற்பக விநாயகர்’ என்பது.

அவர் தன் நிலையில்,

• சொல்லுக்கும் நினைவுக்கும் எட்டாதவர்.
• துரியநிலையில் இருப்பவர்.
• ஞானமே சொரூபமாக இருப்பவர்.

இது அவருடைய சொரூப நிலை அல்லது உண்மை நிலை எனப்படும். இது பரசிவமாக இருக்கும் நிலை.

ஞானமே சொரூபமாக உடைய பரசிவம் தன்னை அடியவர்கள் வழிபட்டு உய்வதற்காகவும் அடியவர்களுக்கு அருள் செய்வதற்காகவும் அற்புதமான வடிவம் கொண்டு காட்சிக்கும் நினைப்புக்கும் சொல்லுக்கும் எட்டுபவராக எளிவந்து அருளும். அத்தகைய அற்புதக் கோலங்களில் ஒன்று விநாயக வடிவம். ( அற்புதம் – அற்புதம் என்பது உலகில் எங்கும் காணப்படாது இயற்கைக்கு மாறாக நிகழ்வது. இது திருவருளால் மட்டுமே நிகழ்வது.)

அவ்வற்புத வடிவமானது:

• தாமரை மலர்போன்ற மென்மையும் அழகும் மலர்ச்சியும் உடைய திருவடிகள்.
• அத்திருவடிகளில் இனிய ஒலியெழுப்பும் சிலம்பு.
• பொன்னரைஞாண்.
• அழகிய பட்டாடை அணிந்த இடுப்பு
• பேழை (பெட்டி) போன்ற வயிறு.
• பெரிய வலிமை மிக்க தந்தம்.
• யானைமுகம்.
• முகத்தில் அணிந்த சிந்தூரம்.
• ஐந்துகைகள்.
• அங்குசம், பாசம் என்னும் ஆயுதங்கள்.
• நீலமேனி (நீலம் – கருமை)
• தொங்குகின்ற வாய்.
• நான்கு தோள்.
• மூன்று கண்.
• கன்னத்தில் மதநீர் வடிந்த சுவடு.
• இருபெரிய செவிகள்.
• பொற்கிரீடம்
• பூணூல் புரள்கின்ற மார்பு.

இது குணங்குறி அற்ற பரசிவம் உயிர்களுக்கு அருளும் பொருட்டு மேற்கொள்ளும் வடிவங்களுள் ஒன்று. அதனால் தடத்த வடிவம் அல்லது தடத்த நிலை எனப்படும். இறைவடிவங்களைத் தரிசித்துத் தொழும்போது திருவடியிலிருந்து தொடங்கி உச்சிவரைக் கண்டு திருமேனியில் விழியைப் பதித்தல் முறை. திருவடி என்பது திருவருள்.  திருவருளால் இக்காட்சி நடைபெறுகின்றது என்பது பொருள்.

•  அவருக்கு நிவேதனப் பொருள்கள் முப்பழம்.
•  ஊர்தி மூஷிகம்
•  அவர் தன்னை வழிபடும் அடியவர்களுக்குத் தாய்போன்ற அன்புடையவர்.
•  எப்பொழுதும் அடியவர்களைப் பிரியாமல், அவர்களுடைய அறிவுக்கு அறிவாய், அறிவினுள்ளே இருந்து அவர்களுக்கு வாழ்வில் வழிகாட்டுவார்.
•  அடியவர்களுக்குப் பக்குவம் வந்த காலத்தில் குருவடிவாக வெளிப்பட்டு வந்து, முன் நின்று தீக்கை செய்து உண்மை ஞானம் புகட்டுவார்.
•  அடியவர்களை யோகநெறியிலும் ஞானநெறியிலும் நிற்கச் செய்வார்.
•  ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலப் பிணிப்பிலிருந்து விடுபடச் செய்வார்
•  நின்மல அவத்தை (அருளுடன் கூடிநிற்கும் நிலை) யில் நிற்கச் செய்வார்.
•  அளவில்லாத ஆனந்த அனுபவம் விரியச் செய்வார்.
•  இறுதியில் தன்னைப்போலத் தன் அடியவர்களையும் என்றும் மாறாத அழியாத நிலையில் (தத்துவநிலை) நிற்கச் செய்வார்.

விநாயகப் பெருமான் உணர்த்தும் ஞானநெறி

•  குருவாக வந்து தீக்கை அருளுகின்றார்

•  இதுவரையிலும் அவ்வுயிர் செத்துப் பிறந்து உழல்வதற்குக் காரணமான மயக்க அறிவைப் போக்குகின்றார்.

•  திருவைந்தெழுத்தை (‚ பஞ்சாக்கரம்) நெஞ்சில் பதிவிக்கின்றார்.

•  உள்ளத்தில் வெளிப்பட்டு விளங்கி நிற்கின்றார்.

•  பதி, பசு, பாசம் எனும் அனாதியான முப்பொருள்களின் இயல்பினை விளக்கி உரைக்கின்றார். சஞ்சிதம் எனும் பழவினையைப் போக்குகின்றார். ஞானோபதேசம் செய்கின்றார்.

•  உபதேசித்த ஞானப்பொருளில் ஐயம்,  திரிபு ஆகியன நேரிடாமல் தெளிந்த உணர்வு உண்டாமாறு அருளுகின்றார்.

•  ஐம்புலன்கள் விடயங்களை நோக்கி ஓடி விருப்பு வெறுப்புக் கொண்டு துன்புறாதபடி புலனடக்கம் உண்டாவதற்குரிய வழியினைக் காட்டியருளுகின்றார்.

•  உடம்பில் உள்ள தத்துவக் கருவிகள் எவ்வாறு ஒடுங்குகின்றன என்பதை அறிவிக்கின்றார்.

•  பிராரத்த வினை தாக்காதவாறு காப்பாற்றுகின்றார்.

• ஆணவம லத்தால் வரும் துன்பத்தைப் போக்குகின்றார்.

•  ஆன்மாவை நின்மல நிலைக்கு உயர்த்தி நின்மலதுரியம் நின்மலதுரியாதீதம் என்னும் நிலைகளில் திருவருளுடனும் சிவத்துடனும் கலந்து நிற்கச் செய்கின்றார்.

குருவாக வந்த விநாயகப் பெருமான் இவ்வாறு ஞானநெறியை அருளி, இந்த ஞானநெறியில் நெகிழ்ந்து விடாது உறுதியாய் நிற்பதற்குரிய யோகநெறியினையும் அறிவித்தருளுகின்றார்.

•  ஒன்பது வாயில்களை உடைய உடம்பில் உள்ள ஐம்புலன்கள் ஆகிய கதவுகளை அடைத்து மனம் உள்ளே (அகமுகப்பட்டு) நிற்கச் செய்கிறார்.

•  இதனால் ஆதாரயோகம் மேற்கொள்ளும் முறையினைத் தெளிவிக்கின்றார்.

•  மவுனசமாதி நிலையினை அடையச் செய்கின்றார்.

•  இடநாடி, வலநாடி, சுழுமுனா நாடி என்னும் நாடிகளின் வழியாய் மூச்சுக்காற்று இயங்கும் முறையினைத் தெரிவிக்கின்றார்.

•  சுழுமுனா நாடி மூலாதாரத்திலிருந்து கபாலம் வரையிலும் (தலையுச்சி) சென்று நிற்கும் நிலையினைத் தெரிவிக்கின்றார்.

•  அவ்வாறு செல்லும் வழியில் உள்ள அக்கினி மண்டலம், சூரிய மண்டலம், சந்திர மண்டலம் என்னும் பகுதிகளின் இயல்பைத் தெரிவிக்கின்றார்.

• மூலாதாரத்தில் உள்ள ஹம்ச மந்திரம், குண்டலினி சத்தி, பிரணவ மந்திரம் என்பனவற்றின் இயல்பினைத் தெரிவிக்கின்றார்.

•  இடகலை, பிங்கலை என்னும் மூச்சுக்காற்ரினால் குண்டலினி என்னும் சத்தியை எழுப்பிச் சுழுமுனைநாடி வழியாக மேலே கபாலம் வரையிலும் பிரணவமந்திரத்துடன் ஏற்றும் முறையினையும் தெரிவிக்கின்றார்.

•  இவ்வகையில் பிரணவமந்திரம் பலகலைக்களாகப் பிரிக்கப்பட்டு, (மூன்று, ஐந்து, பன்னிரண்டு, பதினாறு) உடம்பில் அங்கங்கே நிறுத்தித் தியானிக்கப்படுவதாகிய பிராசாத யோகம் என்னும் நெறியினையும் கற்பிக்கின்றார்.

•  இப்பிராசாத யோகத்தினால் ஆன்மா பிரமரந்திரம் (தலையுச்சி) என்னும் இடத்தையும் கடந்து மேலே துவாதசாந்தப் பெருவெளி என்னும் இடம்வரையிலும் சென்று சிவத்துடன் கலந்து நின்று சிவானந்தம் அனுபவிக்கச் செய்கின்றார்.

• இவ்வாறு ஆறாதார யோகம், அட்டாங்க யோகம், பிராசாத யோகம் என்னும் முறைகளில் நிற்கச் செய்து மனோலயம் அடையச் செய்கின்றார்.

•  இதனால் உண்டாகும் அகக் காட்சியினால் ஆன்மாவின் இயல்பு,  உடம்பின் இயல்பு,  மாயாமலம் கன்மமலம் ஆணவமலம் என்பனவற்றின் உண்மையியல்பு ஆகியவற்றை அறிய வைக்கின்றார்.

•  சப்தப்பிரபஞ்சம் (ஒலியுலகம்) அர்த்தப்பிரபஞ்சம்(பொருளுலகம்) என்பனவற்றினியல்பையும் அவற்றில் பரம்பொருள் சிவலிங்கரூபமாகக் கலந்திருக்கும் முறையினையும் அறியச் செய்கிறார்.

•  இத்தகைய பரம்பொருள் மிகச் சிறிய பொருள்களுக்கெல்லாம் மிகச் சிறியதாகவும், மிகப் பெரிய பொருள்களுக்கெல்லாம் மிகப் பெரிய பொருளாகவும் இருக்கும் நிலையை உணரச் செய்கின்றார்.

•  இத்தகைய பரம்பொருள்சை உலகவாழ்வில் இருந்துகொண்டே அறிவதும் அப்பொருளுடன் கலந்து ஆனந்தம் அனுபவிப்பதும் கரும்பினைக் கணுக்கணுவாகச் சுவைத்துச் செல்லும் அனுபவம் போன்றது.

• இந்த அனுபவம் நீடித்திருக்கத் திருநீறு உருத்திராக்கம் முதலிய சிவசின்னங்களை அணிய வேண்டும்.
•  அவற்றையும் அவற்றை அணிந்துள்ள அடியார்களையும் சிவமெனவே கண்டு வழிபடுதல் வேண்டும்.

•  எப்பொழுதும் அடியார் கூட்டத்துடன் கலந்திருத்தல் வேண்டும்.

•  திருவைந்தெழுத்து மந்திர செபத்தைக் கைவிடலாகாது.

இவ்வாறு விநாயகப் பெருமான் பக்குவமுடைய ஆன்மாவுக்கு ஞானோபதேசம் செய்து ஞானநெறியிலும் யோகநெறியிலும் நிற்கச் செய்து இவ்வுலகிலேயே சீவன்முத்தனாக இருந்து சிவானந்தம் அனுபவிக்கும் நிலையினையும் தந்து, அவ்வான்மா சிவத்தைப் போலென்றும் ஒரேதன்மையுடையதாய் இருக்கும் நிலையினை அடையச் செய்கிறார். அந்நிலையிலிருந்து அவ்வான்மா தன்னைவிட்டு நீங்காமல் தனக்கே அடிமையாய் இருக்கும் நிலைமையினையும் விநாயப் பெருமான் அருளுகின்றார் என்னும் அரிய செய்திகளை விநாயகர் அகவல் என்னும் இந்த நூல் கூறுகின்றார்.

ஆதாரம்: http://www.tamilhindu.com/2011/09/vinayagar-agavbal-an-intro/

57)நிறம் மாறும் அற்புத விநாயகர்

கன்னியாகுமரி மாவட்டத்தில் தக்கலையிலிருந்து ஒன்றரை கி.மீ. தொலைவில் கேரளபுரம் என்ற சிறிய கிராமம் உள்ளது. அங்கு பேருந்து நிறுத்தத்திற்கு அருகிலேயே ஒரு அழகிய ஆலயம் உள்ளது. இதுவே மகாதேவன் ஆலயமாகும்.

இவ்வாலயத்தின் வெளிப் பிரகாரத்தில் அமைந்துள்ள விநாயகர் சந்நிதியே கோயிலுக்குப் பெருமை சேர்க்கிறது. இங்கு எழுந்தருளியிருப்பவரே நிறம் மாறும் விநாயகராவார்.

ஆண்டு தோறும் உத்தராயண காலத்தில் (மாசி மாதம் முதல் ஆடி மாதம்வரை) இவ்விநாயகர் (ஆவணி மாதம் முதல் தை மாதம்வரை) நிறம் கருமையாக உள்ளது என்பது இதன் சிறப்பு.

Read more: http://truetamilans.blogspot.com/2007/09/blog-post_14.html#ixzz242ExNNO8

58)1 – 5 தந்திரங்களின் அதிகார அகரவரிசை

தொடரும்…….

———————————————————————————————————————————————————————————-

சிவயோக வாழ்வளிக்கும் சைவம்  அருளிய அரும்பெரும் செல்வங்களைக் காண  ( சைவத்தை பிரித்து தமிழ் வாழ்ந்ததாக வரலாறு இல்லை) இங்கே அழுத்தவும்.

———————————————————————————————————————————————————————————-